×

கந்தர்வகோட்டை அருகே 5 கோடியில் உயர்மட்ட பாலம் கட்டுமான பணி

 

கந்தர்வகோட்டை,பிப்.7: புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை பெரம்பலூர் -மானாமதுரை ரோடு ராமுடையன்பட்டி சாலையில் ₹4.95 கோடியில் உயர் மட்ட பாலம் அமைக்கும் பணிக்கான அடிக்கல் நாட்டு விழா தமிழ்நாடு அரசு நெடுஞ்சாலை துறை மூலம் நடைபெற்றது . விழா தமிழ்நாடு சட்டம் நீதிமன்றங்கள், சிறைத்துறை, ஊழல் தடுப்பு துறை அமைச்சர் ரகுபதி தலைமையிலும், வடக்கு மாவட்ட திமுக செயலாளர் மற்றும் திருச்சி விமான நிலைய ஆலோசனை குழு உறுப்பினர் கே.கே.செல்லப் பாண்டியன் முன்னிலையில் நடைபெற்றது. அமைச்சர் ரகுபதி கட்டுமானப்பணியை துவக்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் கந்தர்வகோட்டை எம்எல்ஏ சின்னதுரை, கோட்ட பொறியாளர் வேல்ராஜ், உதவி கோட்ட பொறியாளர் சீனிவாசன், உதவி பொறியாளர் கோட்டை ராவுத்தர், வடக்கு ஒன்றிய செயலாளர் கோமாபுரம் தமிழ் ஐயா, தெற்கு ஒன்றிய செயலாளர் பரமசிவம், அரவம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் சிவரஞ்சனி, மாவட்ட பிரதிநிதியும், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவருமான முத்துக்குமார், வர்த்தக அணி துணை அமைப்பாளர் பழனிவேல், மாவட்ட மீனவரணி அமைப்பாளர் மற்றும் நகர செயலாளர் ராஜா, மீனவர் அணி துணை அமைப்பாளர் ஜானகிராமன் , மதிமுக ஒன்றிய செயலாளர் வைரமுத்து மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். அமைச்சர் ரகுபதி பேசுகையில் பாலம் கட்டும் பணியை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு உடனடியாக கொண்டு வர வேண்டுமென கேட்டுக் கொண்டார்.

The post கந்தர்வகோட்டை அருகே 5 கோடியில் உயர்மட்ட பாலம் கட்டுமான பணி appeared first on Dinakaran.

Tags : Crore ,Kandarvakota ,Ramudayanupati Road ,Kandarvakottai District Perambaluur-Manamadurai Road ,Tamil Nadu Government Highway Department ,Festival ,
× RELATED கந்தர்வகோட்டை அருகே கிணற்றில் விழுந்த ஆடு உயிருடன் மீட்பு